நாட்டில் கொரோனா தொற்று குறித்த தற்போதைய முழு விபரம் உள்ளே!

நாட்டில் நேற்று பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக சற்று குறைவடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் 403 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் 81 பேர் மாத்திரமே கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் கொம்பனி தெரு பகுதியில் 27 பேரும்
தெஹிவளை பகுதியில் 9 பேரும், ஏனையவர்கள் கிருலப்பனை, கொட்டாஞ்சேனை , மட்டக்குளி, வெல்லம்பிட்டி மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களிலும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவாட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, கண்டி மாவட்டத்தில் 56 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 30 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 27 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 20 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 18 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 6 பேரும், யாழ்ப்பாணத்தில் 4 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 2 பேரும் நேற்றைய தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 774 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 37 ஆயிரத்து 252 பேர் குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 309 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாடு முழுவதும் முப்படையினரால் நடாத்தப்படும் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4 ஆயிரத்து 580 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக நாடு முழுவதும் 12 இலட்சத்து 88 ஆயிரத்து 562 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!