நாடு திரும்புபவர்களுக்கு கட்டண அடிப்படையில் தனிமைப்படுத்தல் கட்டாயமில்லை – நாமல் ராஜபக்‌ஷ

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான விமானங்களின் எண்ணிக்கை அடுத்த வாரம் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்படும் அனைவரும் அரசாங்கத்தின் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்டணம் செலுத்தி ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதற்கான நிர்பந்தம் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியுள்ள 68 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!