சீனா வழங்கவிருக்கும் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பற்றது: அம்பலப்படுத்திய மருத்துவர்!

சீனா உலக நாடுகளுக்கு வழங்கவிருக்கும் பிரதான கொரோனா தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பற்றது என அந்த நாட்டு மருத்துவர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஷாங்காய் நகரத்தை சேர்ந்த தடுப்பூசி தொடர்பில் சிறப்பு மருத்துவரான Tao Lina என்பவரே, தமது சமூக ஊடக பக்கத்தில் குறித்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.

சீன அரசாங்க நிறுவனமான Sinopharm தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியால் 73 பக்கவிளைவுகள் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர் Tao Lina-ன் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெளிநாட்டு ஊடகங்கள் திட்டமிட்டே அவரது கருத்துக்களை வளைத்தொடித்து குழப்பத்தை ஏற்படுத்த பார்ப்பதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே, Sinopharm தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை தாம் சொல்ல வந்த வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக மருத்துவர் Tao Lina நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், தாமும் Sinopharm கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், இரண்டாவது டோஸ் சனிக்கிழமை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sinopharm கொரோனா தடுப்பூசியானது நிபந்தனைகளுடன் பயன்படுத்தலாம் என கடந்த டிசம்பர் 31 அன்று சீன அரசாங்கம் அனுமதி அளித்தது.

பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் மில்லியன் கணக்கிலான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கவும் சீனா திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!