பிரித்தானியாவில் ஆசிரியர் செய்த செயல்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!

30 வயதான ஸ்காட் லீவோல்ட்-டேவி பிரித்தானியாவின் நார்ஃபோல்க் கவுன்டியில் உள்ள Norwich நகரில் இருக்கும் ஓபன் அகாடமி மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 2015-ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக பணியாற்றிய அவர் 2019 ஜனவரியில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவர் ஜனவரி 18-ஆம் திகதி பணியிலிருந்து விலகுவதாக இருந்தது.

ஆனால், இறுதி நாளுக்கு முந்தைய நாள், அவர் சில மாதங்களுக்கு முன்பு வரை இப்பள்ளியில் படித்த ஒரு மாணவியுடன் நெருக்கமான உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனையடுத்து, பிரித்தானியாவின் Teaching Regulation Agency-ன் ஒரு குழு இது குறித்து விசாரனையில் ஈடுபட்டது.

குழுவின் விசாரணையில், ஸ்காட் லீவோல்ட்-டேவி தன்னிடம் படித்த மாணவியுடன் நெருக்கமாக இருந்தது உறுதியானது.

மேலும், அவர் இப்போதும் அந்த மாணவியுடன் தொடர்பில் இருப்பதாகவும், இருவரும் ஒன்றாக வசித்துவருவதும் தெரியவந்தது.

அதற்கு மேலாக மாணவியுடனானா பழக்கத்தை தொடர்வதற்காகவே அவர் தனது வேலையை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

பிரித்தானிய கல்வித் துறையில் இது குறித்து முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும் சாரா பக்ஸி, இந்த பொருத்தமற்ற உறவு ஒரு பாலியல் உந்துதலாக கருதப்படுகிறது என்று கூறினார்.

மாணவர் பள்ளியில் இருந்தபோது இவர்களுக்கு இடையேயான உறவுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குழு ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

ஆனால், லீவோல்ட்-டேவி தனது “பணியை விட்டு வெளியேறிய உடனேயே அவர்களது உறவு தொடங்கியது, அந்த நிலையில் அவர்கள் ஒருவருக்கொருவர் பற்றிய அறிவு மாணவர்-ஆசிரியர் அடிப்படையில் இருந்தது” என்று கூறியுள்ளார்.

“ஒரு ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவருக்கு இடையிலான அனைத்து உறவுகளும் பொருத்தமற்றவை என்று குழு கருதவில்லை என்றாலும், டேவி பணியிலிருந்து வெளியேறுவதற்கும், அவர்களது உறவுக்கும் இடையில் இதுபோன்ற நெருக்கம் இருக்கும்போது, ​​குழு இந்த விஷயத்தில் அவ்வாறு இருக்க வேண்டும் என்று தீர்மானித்தது,” என்று அவர் கூறினார்.

இதன்முலம், ஒரு ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையில் இருக்க வேண்டிய எல்லைகளை வேண்டுமென்றே அவர் மீறிவிட்டார் என்பது தெளிவாகுவதாக குழு தீர்மானித்தது.

அவரது நடவடிக்கைகள் கற்பித்தல் தொழிலை இழிவுபடுத்தும் என்பதனால், லீவோல்ட்-டேவி காலவரையின்றி கற்பிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை நோட்டீஸ் வழங்கிய 28 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவருக்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!