அகற்றப்பட வேண்டிய ஒன்றே என்கிறார் துணைவேந்தர்!

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்பட வேண்டிய ஒன்று என துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் அகற்றப்பட்டது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் இது குறித்து பேசிய அவர், “சட்டபூர்வமற்று எது கட்டப்பட்டாலும் அது அகற்றப்படவேண்டும் என எழுத்து மூலமாக எமக்கு அனுப்பப்பட்டது. அகற்றப்பட்ட பின் இதனை அறிவிக்க வேண்டும்.

இது கட்டப்பட்டது தொடர்பில் தமக்கு புலனாய்வு மூலம் தகவல் கிடைத்ததாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த விடயத்தை பராமரிப்பு தரப்பினருக்கு அனுப்பியிருந்தேன்.

இதனை வைத்துக்கொண்டிருக்க முடியாது. அகற்றப்படவேண்டிய விடயம்.

சின்ன அத்திவாரக்கல்லு வைப்பதென்றாலும் உரிய அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் என்று உள்ளது. சிலர் இங்கு தமக்கு அரசியல் இலாபம் தேடுகின்றனர். ஆர்வக்கோளாறில் வந்துள்ளார்கள், அவர்கள் தாங்களாக போகாது விடின் மிரட்டல்களை கையாளுவோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!