அரசாங்கத்தை வீழ்த்த யார் கை கோர்த்தாலும் வரவேற்போம் – பந்துல

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொருத்தமற்ற இந்த நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பொது எதிரணியுடன் யார் கை கோர்த்தாலும் அதனை வரவேற்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிருந்து விலகிய 16 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைவது தொடர்பாக கூட்டு எதிர்கட்சியின் நிலைப்பாடு பற்றி விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைவதை பொது எதிரணி வரவேற்கின்றது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொருத்தமற்ற இந் நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பொது எதிரணியுடன் யார் கை கோர்த்தாலும் அதனை வரவேற்போம்.

தேசிய அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து நீக்குவதாயின் பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்ய வேண்டும். எனினும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினால் மாத்திரம் அதனை மேற்கொள்ள முடியாது.

ஆகவே கூட்டு எதிர்க்கட்சியின் 54 உறுப்பினர்களும் அரசங்கத்திலிருந்து விலகிய 16 உறுப்பினர்களும் மற்றும் தேசிய அரசாங்கத்தை எதிர்க்கும் ஏனைய உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு எம்மால் இதனை மேற்கொள்ள முடியும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!