வாக்குறுதிகளை நிறைவேற்றப்படுவதை அமெரிக்கா உறுதி செய்யும்! – ஜயந்த தனபால

ஐ.நா மனித உரிமை பேரவைக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை அமெரிக்க உறுதி செய்யும் என இலங்கையின் ஐநாவிற்கான முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது நேசநாடுகள் ஊடாக இதற்கான அழுத்தத்தை தொடர்ந்தும் கொடுக்கும். ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.

அமெரிக்காவின் முன்னையை குடியரசு கட்சி அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் பிரச்சினைகள் காணப்பட்டன. அவர்கள் அதிலிருந்து விலகி பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர். இஸ்ரேல் தொடர்பான பிரேரணைகளே அமெரிக்காவிற்கு பிரச்சினை எங்களுடைய பிரேரணைகள் பிரச்சினையில்லை என ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!