மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று!

மேல் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறும் நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் என்டிஜன் பரிசோதனையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறுவதற்கு முற்பட்ட 326 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பயணிக்கும் நபர்களுக்கு Rapid Antigen பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை கடந்த மாதம் 18 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு கடந்த 13 ஆம் திகதி முதல் மீண்டும் குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!