ஜல்லிக்கட்டு களத்தில் வேளாண் மசோதாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய வீரர்கள்!

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரிந்ததே இந்த நிலையில் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு மாடுபிடி வீரர்கள் திடீரென கருப்பு கொடி காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் களத்தில் இறங்கி அந்த இரண்டு வீரர்களிடம் விசாரணை செய்தபோது வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து வந்த இரண்டு மாடுபிடி வீரர்களும் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவாக, வேளாண் சட்டத்திற்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய இரண்டு வீரர்களால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!