“எனது இல்வாழ்க்கைக்கு இடைஞ்சல்” : பிறந்த குழந்தையை மாட்டு சாணத்தில் புதைத்த தாய்

ஒடிசாவில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் திபாசாஹி கிராமத்தில் கடந்த வருடம் திருமணமொன்று நடைபெற்றுள்ளது.

பின் குறித்த யுவதி தனது முதல் குழந்தையைப் பிரசவிக்க கர்ப்பமாகியுள்ளார். இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அக்குழந்தை பிறந்த பிறகு அதை யாருக்கும் தெரிவிக்காமல், இத்தாய் அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு மாட்டுச் சாண குழியில் உயிருடன் புதைத்துள்ளார். குழந்தை பற்றி கிராம மக்கள் கேட்டதற்கு நிறையக் காரணங்களை சொல்லிச் சமாளித்துள்ளார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் குழியில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் உடனடியாக போலிஸிற்கு தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் நடத்திய சோதனையில் அந்த குழியில் பிறந்த குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது. இதைக் கண்டு கிராமத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்த அவ்யுவதியின் குழந்தை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து , அவரிடம் விசாரணை நடத்தியதில், திருமண வாழ்க்கைக்கு குழந்தை இடைஞ்சலாக இருக்கும் என கருதி இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட பொலிஸாரும், ஊர் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!