சைப்ரஸிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா?

சைப்ரஸ் நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட பணியாளர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சைப்ரஸ் நாட்டில் இருந்து 45 பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த 45 சைப்ரஸ் பிரஜைகளுக்கும் விசேட சோதனைகளை முன்னெடுக்க சுகாதார தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அவர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்காக விசேட வைத்திய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த வாரத்தில் 4 ஆயிரத்து 200 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும், அவர்களில் 150 சைப்ரஸ் பிரஜைகள் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 150 சைப்ரஸ் பிரஜைகளில் 45 பேர் இவ்வாறு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட நிலையில், இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள், வழமைப்படி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!