உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிகளை விசாரிக்கும் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதன்படி, ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.

2019 ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டின் பல கிரிஸ்தவ தேவாலயங்களில் பயங்கரவாத குழுக்கலினால் திட்டமிடப்பட்ட தாக்குமல்கள் முன்னெடுக்கப்டடன.

இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலை தவிர்ப்தற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்குறித்து பலத்தரப்பிடமும் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

இந்த நிலையில், தாக்குதல் சம்பவத்தின் பின்னணி மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் தவறுகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!