88 ஆண்டுகளுக்கு முந்திய வர்த்தமானி எதற்கு?

1933ஆம் ஆண்டில் குருந்தூர் மலைக்காடு என தமிழ்ப் பெயருடன் தான் தொல்பொருள் ஆராய்வுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 88 வருடங்களுக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி விடயத்தில் தற்போது எதற்காக கவனம் செலுத்தப்படுகிறது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று நாடாளுமன்ற அமர்வின்போது குருந்தூர் மலைப்பகுதி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“முல்லைத்தீவு – குருந்தூர் மலைப்பகுதியில் சிவன் ஆலயம் ஒன்று காணப்பட்டது.அங்கு பொங்கல் வைத்து வழிபாடும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.பிக்கு ஒருவரின் தலையீட்டினால் இவ்விடயம் நீதிமன்றத்திற்கு சென்றது.இவ்வழக்கின் தீர்ப்பில் இங்கு வழிபாடுகளை நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!