19 நாட்களில் 11 ஆயிரம் தொற்றாளர்கள்! – வரும் நாட்களில் வரப்போகும் ஆபத்து

எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தவிர்க்க முடியாதவாறு அதிகரிக்கலாம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளாந்தம் 600க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவாறு அதிகரிக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களில் 55வீதமானவர்கள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்ளேயே உயிரிழந்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் எனினும் தற்போது கொழும்பிற்கு வெளியே உயிரிழப்புகள் மெல்ல மெல்ல அதிகரிப்பதை காணமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும்போது உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவாறு அதிகரிக்கப் போகின்றன என தெரிவித்துள்ள அவர் இந்த தருணத்தில் நாட்டின் ஏனைய பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கவனத்தை செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 19 நாட்களில் 11000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!