அலுவலக மேஜையில் ஜோ பைடன் செய்த மற்றம்!

அமெரிக்க அதிபராக இருந்த போது டிரம்ப்பின் அலுவலக மேஜையில் சிவப்பு பட்டன் கொண்ட ஒன்றை பொருத்தியிருந்த நிலையில், அதை பைடன் உடனடியாக நீக்கியுள்ளார். அமெரிக்காவின் 46-வது அதிபராக தெரிவு செய்யப்பட்ட ஜோ பைடன் கடந்த புதன் கிழமை பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற கையோடு, பல அதிரடி நடவடிக்கைகளில் ஜோ பைடன் இறங்கியுள்ளார். குறிப்பாக அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் இருந்த போது, கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை இவர் கைவிட்டு வருகிறது.

அதில் ஒன்று தான், ஓவல் அலுவலக மேஜையில் இருக்கும் சிவப்பு பட்டன் கொண்ட பொருள், இது குறித்து அமெரிக்க ஊடகவியலாளர் டாம் நியூட்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் அமரும் பிரம்மாண்டமான ரெசல்யூட் மேஜை உள்ளது. பாரம்பரியமான அந்த மேஜையில் டிரம்ப் ஒரு சிறிய சிகப்பு பட்டனை பொருத்தியிருந்தார். அதனை தற்போது அதிபர் பைடன் நீக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அது டயட் கோக் பெறுவதற்கான பட்டன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ரேடியோவில் தலைமை அரசியல் விமர்சகராக இருக்கும் டாம் நியூட்டனும், சன்டே டைம்ஸில் அரசியல் பிரிவு ஆசிரியராக இருக்கும் டிம் ஷிப்மேன் என்பவரும் 2019-ஆம் ஆண்டு டிரம்பை பேட்டி எடுக்கச் சென்ற போது அந்த சிறிய சிகப்பு நிற பட்டனை ஆச்சரியமாக பார்த்துள்ளனர்.

அப்போது டிரம்ப் அந்த பட்டனை அழுத்தியுள்ளார். உடனே பணியாள் ஒருவர் வெள்ளி தட்டில் டயட் கோக் கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் ஒரு சோடா பிரியர் ஆவார். தினசரி 12 கேன் டயட் கோக் அருந்துவார் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், க்ளிப் சிம்ஸ் என்ற வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர்,’டீம் ஆப் வைப்பர்ஸ் என்ற சுயசரிதை எழுதியுள்ளார்.

அதில், இந்த சிகப்பு பட்டன் குறித்து அவர் விவரித்துள்ளார்.

இது அணு ஆயுதங்களை இயக்கச் செய்யும் பட்டன் என்று தன்னை பார்க்க வருபவர்களிடம் கூறிவிட்டு உடனே அழுத்திவிடுவார்.

வந்திருக்கும் விருந்தினர்கள் மிரட்சியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பார்கள். அப்போது ஒரு பணியாள் வெள்ளித்தட்டில் டயட் கோக் நிரப்பிய கண்ணாடி கோப்பையை கொண்டு வருவார். டிரம்ப் வெடித்துச் சிரிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பல நாட்கள் அந்த சிவப்பு பட்டன் குறித்த உண்மை தகவல் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அது தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!