தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட, கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கைகள், இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் ஆறு வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

தடுப்பூசி ஏற்றல் மேல் மாகாணத்தின் 06 முக்கிய மருத்துவமனைகளில் இன்று ஆரம்பிக்கப்படும். கொவிட்-19 தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுமார் 150,000 சுகாதாரப் பணியாளர்கள், 120,000 முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தனிநபர்களின் சுயாதீனமான முடிவாகும். அதை விரும்பாதவர்கள் ஏற்றிக்கொள்ளாதிருக்க முடியும்’ என கொவிட்-19 தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!