உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த அறிக்கையினை அச்சிடும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான மறைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் 15 மாத காலப்பகுதியில் 450க்கும் மேற்பட்ட நபர்களிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!