இந்தியாவில் கொரோனாத் தொற்றில் இருந்து குணமடைந்தோர் 97 சதவீதமாக உயர்வு!

Coronavirus threat: Staff of CT Institutions sanitising the school buses and labs in the wake of COVID-19 threat in Jalandhar. express photo
இன்றைய நாள் கணக்கெடுப்பின்படி இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் கொரோனாத் தொற்று குறித்த விவரங்களைப் பார்க்கலாம். அதாவது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,427 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,07,57,610 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் 1,68,235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் நேற்று ஒருநாளில் மட்டும் 11,858 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி மொத்தமாக இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,34,983 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 1,54,392 ஆக உள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படும் பணியானது வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 37,58,843 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று எண்ணிக்கையானது கடந்தவாரம் 14,000 என்ற அளவில் இருந்தநிலையில் தற்போது மீண்டும் 11,000 என்ற அளவில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் குணமடைந்தோர் விகிதமானது 97 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!