தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 900க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்டி தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 970 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பில் இருந்து நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் பஸ் சாரதிகளிடம் ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளுதல், காய்கறி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் ரெப்பிட் என்டிஜன் மேற்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் சாரதி மற்றும் உதவியாளர்கள் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!