கடந்த அரசாங்கத்தின் முக்கிய ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல்..!

இலங்கையின் 12 பொருளாதார கேந்திர நிலையங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய கடந்த அரசாங்கத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தமானது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் முன்னெடுக்கபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் தகவல்கள் வெளியானதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எல்.என்.ஜி 300 மெகாவாட் எரிவாயு மின் நிலையம், எல்.என்.ஜி டெர்மினல், எல்.என்.ஜி எரிவாயு விநியோகம், நிலக்கரி மின் நிலையம் மற்றும் மத்தளை விமான நிலையம் உள்ளிட்ட 12 நிறுவனங்களை வழங்க இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய முன்னாள் அமைச்சர் சகலரத்னாயக்கவினால் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையமானது உள்நாட்டு பணத்தைக்கொண்டு அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!