நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு: கல்வி அமைச்சர்!

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டம் கட்டமாக திறக்கப்பட்டன.

இந்த நிலையில், நாட்டின் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 412 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!