மாணவர்களை விளையாட்டுத் துறையில் பங்கேற்பதற்கு பாடசாலைகளில் இருந்து ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர்

பாடசாலைகளில் இருந்து மாணவர்களை விளையாட்டுத் துறையில் பங்கேற்பதற்கு ஊக்குவிக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஆணைமடு கண்ணங்கர வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், மாணவர்கள் வெறுமனே புத்தகங்களை மாத்திரம் கற்பது பாரிய அழுத்தமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய மாணவர்கள் பெறும் அறிவானது கல்விதுறைக்கு மாத்திரமன்றி விளையாட்டு மற்று தொழிற்பயிற்சிக்கும் பயனுள்ளதாக இருக்குமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தொழில் பயிற்சி அதிகாரசபையொன்றை உருவாக்கி அவர்களை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் போதே அவர்களினால் வேலைவாய்ப்பினை பெற்று கொள்வது கடினமாக அமையாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!