கனடாவில் கொரோனா தடுப்பூசியால் 651 பேர் பாதிப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான கனடாவில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. கனடாவில் நேற்று (வெள்ளி கிழமை) வரை 12 லட்சத்து 11 ஆயிரத்து 617 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. எனினும், கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பலருக்கு பின்விளைவுகள் ஏற்படுகின்றன என தெரிய வந்துள்ளது. இதனால் சிலர் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் கொரோனா தடுப்பூசிக்கு பின்னான விளைவுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் மரணமடைந்தவர்களை பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் கூறும்பொழுது, கொரோனா பாதிப்புகளுக்கு தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 651 பேருக்கு வேறு வகையான விளைவுகள் ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டது.

அவர்களில் 99 பேருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு ஆபத்து கட்டத்தில் உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!