அமெரிக்காவில் 18 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட பிரபல மொடல்!

அமெரிக்காவின் பிரபல மொடல் ஒருவர் 18 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு, சாலையோரத்தில் சடலமாக் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் தலை, கழுத்து, மார்பு என 18 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு, சாலையோரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் பிரபல மொடலான ரெபேக்கா லாண்ட்ரித்.

பொலிஸின் கூற்றுப்படி, அவரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் பெயர் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று அவரது சட்டைப் பையில் இருந்துள்ளது.

47 வயதான ரெபேக்கா லாண்ட்ரித்தின் சடலம் ஞாயிற்றுக்கிழமை காலை யூனியன் கவுண்டி பகுதியில் சாலையோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீட்கப்படுவதற்கும் சில மணி நேரம் முன்னரே, கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

உடற்கூராய்வில், அவரது உடலில் இருந்து மொத்தம் 18 துப்பாக்கி தோட்டாக்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும், இது கண்டிப்பாக படுகொலை என்றே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவரது சடலம் மீட்கப்படும்போது அவர் அடையாளம் காணப்படவில்லை எனவும், ஆனால் அவரது விரல் அடையாளம் வைத்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவர் ரெபேக்கா லாண்ட்ரித் என தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து 250 மைல் தொலைவில் உள்ள கனெக்டிகட்டில் புதன்கிழமை அன்று அவரது சந்தேகத்திற்கிடமான கொலையாளி ட்ரேசி ரோலின்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மட்டுமின்றி 28 வயதான ட்ரேசி ரோலின்ஸ் என்பவரின் வாகனத்தில் ரத்தமும் துப்பாக்கி தோட்டாக்களின் உறைகளும் பொலிசாரின் பார்வையில் பட்டுள்ளது.

மட்டுமின்றி, கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகள், அவரது மொபைல் போன் தரவுகள் என அனைத்தும் கொலைக்கான ஆதரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மொடல் ரெபேக்கா லாண்ட்ரித் குடும்ப உறுப்பினர்களுடன் எவ்வித தொடர்பும் இன்றி இருந்து வந்துள்ளா என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

ரெபேக்கா வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் பிறந்தார், மேலும் ஐந்து உடன்பிறப்புகளில் அவர் இளையவர் என்றும் ரெபேக்காவின் சகோதரர் ஜார்ஜ் லாண்ட்ரித் கூறியுள்ளார்.

கைதான ட்ரேசி ரோலின்ஸ் மீது கொலை மற்றும் சடலத்தை துஸ்பிரயோகம் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!