சாணக்கியனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் கல்முனை நீதிமன்ற பிரதேசத்திற்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணை நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் பொலிஸாரினால் கையளிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!