தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் அச்சமடையத்தேவையில்லை: சுதர்ஷினி!

நாட்டில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். ஏனெனில் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை சாத்தியப்படுத்த முடியும்.

அத்துடன், சிலர் தடுப்பூசி குறித்து பல்வேறு பொய்யான கருத்துக்களை கூறுகின்றனர். ஏனையோரை பயமுறுத்துகின்றனர். சமூகவலைத்தளங்களின் ஊடாக தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் மிக மிகக் குறைவானது என்பதை பொறுப்புடன் கூறுகிறேன்.

தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட யாரும் இதுவரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை. நாட்டில் இன்றுவரை தரவுரீதியாக சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!