கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டத்துக்கு அழைப்பு!

எதிர்வரும் 20ஆம் திகதி தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி தெரிவித்தனர். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர், இதனை தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து, 20ஆம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், குறித்த தினத்தன்று தீச்சட்டி போராட்டமாக முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.

“இந்த தீச்சட்டி பேரணியானது, கிளிநொச்சி பிள்ளையார் கோவில் முன்றலிலிருந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலினை சென்றடையும். ” அனைவரும் 20ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பேரணியில் கலந்து கொண்டு எமக்கு வலுச் சேர்க்க வேண்டும்” என, அவர் கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!