ஜெனிவாவில் ஆதரவு தருமாறு இந்தியப் பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பினார் ஜனாதிபதி!

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில், இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை அரசு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான சில நாடுகள் கூட்டாகப் புதிய பிரேரணை கொண்டு வரவுள்ளன. இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடிதமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!