ஜனாதிபதி தமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக விமல் வீரவன்ச தெரிவிப்பு..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அரசாங்கத்தை பிரதிநித்துப்படுத்துகின்ற கட்சிகளுக்கு இடையில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் ஆளும் தரப்பை பிரதிநித்துப்படுத்துகின்ற கட்சிகளுக்கு இடையில், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அத்துடன், தாம் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும், ஜனாதிபதியின் கருத்துக்கள் பல இதன்போது முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசாங்கத்தை பிரதிநித்துப்படுத்துகின்ற 10 கட்சிகள், அண்மையில் விமல் வீரவன்சவின் இல்லத்தில் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தன.

இந்தப் பின்னணியில், குறித்த 10 கட்சிகளின் தலைவர்கள், நேற்றைய தினம் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!