பணிக்கு திரும்பாவிடின் விலக்கப்படுவீர்கள் – பல்கலை கல்வி சாரா ஊழியர்களுக்கு உயர் கல்வி அமைச்சு எச்சரிக்கை

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களின் கல்வி சாரா ஊழிய ர்கள் வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு முன் பணிக்குத் திரும்பாவிடின் சேவையிலிருந்து தாமாக விலகியதாகக் கரு தப்படும் என உயர் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி சாரா ஊழியர்கள் கடந்த பெப்ரவரி தொடக்கம் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன் னெடுத்துள்ளனர்.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உயர் கல்வி நிறுவனங்களின் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு இந்த போராட்டத்தை நடத்த வருகிறது.

தொழிற்சங்க குழுவுக்கும் உயர் கல்வி அமைச்சருக்குமிடையே கடந்த வாரம் இடம் பெற்ற சந்திப்பில் சில இணக்கப்பாடுகள் எட்ட ப்பட்டன. எனினும் அவற்றை உயர் கல்வி அமைச்சு இன்னும் நடைமுறைப்படுத்த வில்லை.

இந்த நிலையிலே போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இதனால் நாடு முழு வதுமுள்ள பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன. புதிய மாணவர் அனு மதி மற்றும் பரீட்சைகள் தடைப்பட்டுள்ளன.

கல்வி சாரா ஊழியர்கள் வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் சேவைக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு அவர்கள் பணிக்குத் திரும்பாவிடின் நிரந்தர நியமனம் உறுதிப் படுத்தப்பட்ட ஊழியர்களின் பணிப்புறக்
கணிப்புக் காலம் சம்பளமற்ற சேவைக்காலமா கவே கருத்திற்கொள்ளப்படும்.

அத்துடன் நியமனம் உறுதிப்படுத்தப்ப டாத, அமய மற்றும் ஒப்பந்த அடிப்படை சேவையிலுள்ள ஊழியர்கள் தமது சேவை யிலிருந்து தாமாகவே விலகியதாகக் கருதப்ப டும் என்று உயர் கல்வி அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!