COVAX தடுப்பூசி திட்டம் – சுகாதார அமைச்சு விடுத்து முக்கிய அறிவிப்பு..!

COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் இலவச கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முதல் கட்டமாக 2 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

– Advertisement –
அத்துடம், COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு 4 தசம் 5 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட oxford-astrazeneca கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!