க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்காண கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பரீடசை ஒத்திகைக்கப்பட்டது.

இந்த நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடு முழுவதும் 4 ஆயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மாணவர்கள் 45 நிமிடங்களுக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

மேலும், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 40 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பரீட்சையில் தோற்றுவதற்கான விசேட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணத பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் பணியாளார்களுக்கான விசேட பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், மேலதிக பஸ் சேவைகள் அவசியமாயின் பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.\

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!