கறுப்பு ஞாயிறுக்கு அஸ்கிரிய பீடம் ஆதரவு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு கையளித்துள்ள அறிக்கை முழுமையற்றதெனத் தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், இதற்காகக் கத்தோலிக்க திருச்சபையால் அறிவிக்கப்பட்டுள்ள ‘கறுப்பு ஞாயிறு’க்குத் தமது பூரண ஆதரவு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய விசாரணைகளை மறைத்து, தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு எதிராக நிரந்தரமாகக் குரல் கொடுத்து வந்த பௌத்த – சிங்கள அமைப்புகளைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ள அவர் அக்குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரித்துள்ளார்.

‘உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைது செய்து, இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாமல்த் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்’ என்றார்.

‘இந்தத் தாக்குதலுக்கு தலைமைத்துவம் வழங்கிய தரப்பினருக்கு உரிய தண்டனை வழங்காமைக்கு, எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையைக் ‘கறுப்பு ஞாயிறாக அனுஷ்டிக்க கத்தோலிக்க சபை எடுத்துள்ள நடவடிக்கையை நாமும் அனுமதிக்கின்றோம்’ என்றார்.

ஏனெனில்இ குற்றவாளிகளை அடையாளம் காண நியமிக்கப்பட்ட குழு அதனை உரியமுறையில் நிறைவேற்றப்படவில்லை. இதனுடன் தொடர்புபடாத எமது பௌத்த தரப்பினர் மீதே விரல் நீட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர் எம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உலகுக்கு வெளிகாட்டுவதால் இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!