ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: வெளியான காரணம்!

அமெரிக்கா ரஷ்ய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அதிரடியாக பொருளாதார தடைகளை விதித்தது. ரஷ்யா அதிபரான புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர், அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரசாயன தாக்குதலுக்கு ஆளானார். இதனால் கோமா நிலை வரை சென்ற அவர், ஜேர்மனிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அதன் பின் அங்கிருந்து நலமுடன் நாடு திரும்பினர்.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் திகதி அலெக்சி நாவல்னி ஜேர்மனியில் இருந்து ரஷ்யா திரும்பிய போது, அவரை விமான நிலையத்தில் வைத்தே பொலிசார் கைது செய்தனர்.

ஏனெனில், அவர் மோசடி வழக்கு ஒன்றில், பரோல் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி, குற்றம் சாட்டப்பட்டு, 2 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவும் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.‌‌

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக ரஷிய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், எதிர்க்கட்சித்தலைவர் நவால்னி மீதான நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.‌

அதைத் தொடர்ந்து, நவால்னி விவகாரத்தில் ரஷ்ய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது நேற்று பொருளாதார தடைகளை விதித்தார்.

பேரழிவு ஆயுதங்கள் பயன்பாடு தடைச் சட்டம் 2005 மற்றும் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் கட்டுப்பாடு மற்றும் போர் ஒழிப்பு சட்டம் 1991 ஆகியவற்றின் கீழ் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!