சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை!

சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த விடயம் தொடர்பான கோரிக்கை சுகாதார அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கமைய சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்யொராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடுப்பூசி திட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள முதற் தர ஹோட்டல் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வாகன சாரதிகள் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோருக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!