அரச நிறுவனங்களுக்கு பிரதமர் விடுத்த அறிவுறுத்தல்!

அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

பத்தரமுல்ல – சுஹுறுபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திபின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தாமதப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் முறையான தகவல் தொடர்பு மூலம் இதுபோன்ற செயல்களை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர், அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வெலிக்கட சிறைச்சாலை மறுசீரமைப்பு, மாத்தறை, கோட்டை மற்றும் கண்டி வாகன தரிப்பிட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது உரிய அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் ஊடாக நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு சேவைகளை நிறைவேற்ற முடியுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!