கம்பஹாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கம்பஹா பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட இரண்டு பேர் கடந்த நாட்களில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் குறித்த தகவலலை சுகாதார தரப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த இரண்டு பேரின் மரணத்திற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமை காரணமாக அமையவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரண்டு நபர்களும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமையே காரணமெனவும் தகவல்கள் வெளியாகிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுகாதார தரப்பினால் முன்னெடுக்க்பட்ட ஆய்வுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டமையினால் அவர்கள் உயிரிழக்க வில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவர்களின் மரணமானது இயற்கையானது எனவும் பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அச்சமடையவோ அல்லது பின்வாங்குவதற்கோ அவசியமில்லை எனவும், தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தடுப்பூ வழங்க்பட்டுவரும் முறைமைகளுக்கு அமைவாக உள்வாங்கப்படும் நபர்கள், தமக்கான தடுப்பூயை கட்டாயமாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொது இடங்களில் அல்லது நிலையங்களில் அதிகளவாக பொதுமக்கள் ஒன்றுகூடி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் முறையாக தமக்கான சந்தர்பம் வரும்போது அதனை பெற்றுக்கொள்ளுமாறும் பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!