“பிரபாகரனின் தம்பி நான்; சமரசம் செய்யாமல் சண்டை போடும் துணிவு கொண்டவன்” – சீமான்!

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி அளிக்கப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. குறிப்பாக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது.

இந்த சூழலில் நேற்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்டப் பரப்புரையை திருவொற்றியூர் தொகுதியிலிருந்து தொடங்கினார். தேரடி, பர்மா நகர் முதன்மை சாலை மற்றும் தாளக்குப்பம் சந்தை ஆகியப் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், அனல் மின் நிலையத்தை உருவாக்கி வாழும் இடத்தை அழித்து சாம்பலாக்கி கொண்டிருக்கிறார்கள். காட்டுப்பள்ளியில் 6000 ஏக்கர் இடத்தை அதானி வாங்கி மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளார். பிரபாகரனின் தம்பி நான்; எதற்கும் சமரசம் செய்யாமல் சண்டை போடும் துணிவு கொண்டவன்.

உங்களை நம்பி இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவசக் கல்வியை அளிப்போம் .இலவசங்களை மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் வாழ்வை உயர்த்த முயற்சி செய்வோம். தண்ணீர் விற்பனைக்கு தடை செய்வோம். தரமான மருத்துவம் ,கல்வி ,கல்விக் ஏற்ற வேலை போன்றவற்றை அளிப்போம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!