கிரீஸ் நாட்டை கணகலங்க வைத்த பிஞ்சு குழந்தையின் மரணம்!

கிரீஸ் நாட்டில் பிறந்த 37 நாளில் குழந்தை ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பிரதமர் மிகுந்த வேதனையடைந்துள்ளார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான உயிர்களை எடுத்து வருகிறது.

குறிப்பாக கிரீஸ் நாட்டில் கொரோனா பரவல் காரணமாக, இதுவரை 6,800 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் பயனாக, கிரீஸ் நாட்டில் கொரோனா பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 480 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஏதென்ஸ் நகரில் நவம்பர் மாதம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், நோய் பரவல் காரணமாக, சுகாதார அமைப்பு தாங்க முடியாத மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிறந்து 17 நாளே ஆன ஒரு ஆண் குழந்தை மூக்கு வீக்கம் மற்றும் காய்ச்சல் காரணமாக ஏதென்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிந்தது. அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி பிறந்த 37-வது நாள் அந்த குழந்தை உயிர் இழந்தது.

இதை அறிந்த பிரதமர் கிரியோக்கோஸ் மிட்சோ டாகிஸ், பிறந்த 17-வது நாளில் இருந்து 37 நாள் வரை கொரோனா வைரசை எதிர்த்து போராடிய ஒரு குழந்தை இறந்துள்ளது. இந்த பிஞ்சு குழந்தையை நாம் இழந்த துக்கம் தாங்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!