ஹரி மேகன் தம்பதி குறித்து பிரித்தானியா மகாராணி வெளியிட்ட அறிக்கை!

ஹரி மற்றும் மேகன் நேர்காணலுக்கு பின், பிரித்தானியா மகாராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை மாலை சிபிஎஸ் என்ற அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நேர்காணலில் அரச குடும்பம் குறித்து இளவரசர் ஹரியின் மனைவி மேகன் சரமாரியாக குற்றம்சாட்டினார்.

குறிப்பாக அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் வந்தது. அதுமட்டுமின்றி கலப்பின பெண்ணான தனக்கு பிறந்ததால், தங்கள் மகன் ஆர்ச்சிக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது போன்ற பல குற்றச்சாட்டுகளை மேகன் முன் வைத்தார்.

இவரைத் தொடர்ந்து இளவரசர் ஹரியும், தன்னுடைய சகோதரர் வில்லியம்சுடன் தற்போது வரை பேச்சு இல்லை என்பதையும், கனடாவிற்கு ஏன் சென்றேன் போன்ற பல உண்மைகளை உடைத்தார்.

அப்போது தான் ஒரு அரச குடும்பத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா? ஹரி-மேகன் அரச குடும்பத்தை விட்டு விலகி வந்தது சரி தான் என சிலரும், ஒரு சிலர் இன்னும் பொறுமையாக பேசி தீர்த்திருக்கலாம் என்று கூறினார்.

இந்த நேர்காணலை எல்லாம் மகாராணி பார்க்க கூட மாட்டார் என்றெல்லாம் செய்தி வெளியானது. ஆனால் அதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சற்று முன்னர் பிரித்தானியா மகாராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த சில ஆண்டுகளாக ஹாரி மற்றும் மேகன் எவ்வளவு சவாலாக இருந்து வந்துள்ளனர் என்பதை முழு குடும்பமும் அறிந்து வருத்தப்படுகிறார்கள்.

எழுப்பப்பட்ட பிரச்சினைகள், குறிப்பாக இனம் தொடர்பானவை போன்றவை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். அவை அனைத்தும் குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படும்.

ஹரி, மேகன் மற்றும் ஆர்ச்சி எப்போதும் எங்களின் குடும்ப உறுப்பினர்களாகவே விரும்பப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட பிரித்தானிய மக்கள் பலரும் மகிழ்ச்சி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!