நாட்டில் மேலும் 38 அரசியல் கட்சிகள் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக தகவல்!

நாட்டில் மேலும் புதிய 38 அரசியல் கட்சிகள் புதிதாக விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 158 புதிய அரசியல் கட்சிகள் விண்ணப்பித்திருந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது 76 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!