இன்று வெளியாகிறது திருத்தப்பட்ட வரைவு!

பிரிட்டன் தலைமையிலான இணைத் தலைமை நாடுகளால் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட வரைவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு இன்று வெளியிடப்படவுள்ளது.

அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழு அளவிலான விசாரணை நடத்தப்பட்டு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என இதன்மூலம் வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைவிட, பிரித்தானியாவினால் முன்வைக்கப்பட்ட திருத்தமான – ஐ.நா. அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற வாசகம் இணைக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற ஆலோசனைகளையடுத்து புதிய பிரேரணைகளையும் உள்ளடக்கியதாக தீர்மானம் நேற்றிரவே இறுதியாக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறும் எனவும் பேரவை வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!