தடுப்பூசி இல்லாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை -தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க அரசாங்கம் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இந்த விடயத்தில் இரண்டு வாரங்கள் காத்திருக்க தயாராக உள்ளதாகவும், அதன் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும், சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடு முழுவதும் சேவை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!