பொதுத் தேர்தலுடன் பதவி விலகவிருக்கும் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்!

ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி இரண்டு முக்கிய மாகாணங்களில் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் செப்டம்பரில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

நீண்ட 16 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலுடன் பதவி விலக உள்ளார்.

இந்த நிலையிலேயே இரண்டு முக்கிய மாகாணங்களில் நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி அளிப்பதில் ஏற்பட்ட தோய்வு மற்றும் மாஸ்க் கொள்முதல் செய்வதில் நடந்த ஊழல் போன்றவை கட்சியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

தேர்தல் நடந்த Baden-Württemberg மற்றும் Rhineland-Palatinate ஆகிய இரு மாகாணங்களும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் கோட்டை என்றே கூறப்படுகிறது.

Baden-Württemberg மாகாணத்தில் 31.5% வாக்குகளுடன் கிரீன் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது.

Rhineland-Palatinate மாகாணத்தில் 33.5% வாக்குகளுடன் SPD கட்சி ஆட்சியை கைப்பற்றும் என கூறப்படுகிறது.

ஜேர்மனியில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் தோழமை கட்சியாக CSU இல்லாத ஒரு ஆட்சி கூடிய விரைவில் அமையும் என SPD கட்சியின் சேன்ஸலர் வேட்பாளர் Olaf Scholz தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!