ஹிட்லராக பாவித்தமையின் உள் நோக்கம் அறியாது மாறுபட்ட கருத்துக்களை கூறுகின்றனர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மகா நாயக தேரர்கள் ஹிட்லராக பாவித்தமையின் உள்நோக்கம் அறியாது பலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வாதிகார போக்கு கொண்ட ஹிட்டலரின் ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அழிவுகளின் தாக்கங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது. இந்நிலையிலை இலங்கை மக்கள் மீண்டும் ஏற்படுத்த மாட்டார்கள்.

ஆனால் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சிகைளுக்கு இம்முறையிலே தீர்வுகாண முடியும். சுயாதீனமாக இயங்குவதாக குறிப்பிட்டு அனைத்து அரசியல் துறைகளும் சர்வாதிகார போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது.

அத்துடன் அரசாங்கத்தின் மீதும் அரசியலமைப்பின் மீதும் நாட்டு மக்கள் கொண்டிருந்த மரியாதைகள் இன்று தகர்த்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முறையற்ற நிர்வாகத்தினால் மக்கள் என்றாவது ஒருநாள் சர்வாதிகார ஆட்சியினை தோற்றுவிப்பார்கள்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ இராணுவ ஆட்சியினை ஒரு போதும் தோற்றுவிக்கமாட்டார். நாட்டின் ஜனநாயகத்தினை நிலைநாட்ட செயற்பட்டவர்கள் மீண்டும் குழப்பமான சூழ்நிலைக்கு திரும்ப மாட்டார்கள் .

இன்று நாடு எதிர் கொண்டுள்ள சர்வதேச பிரச்சினைகளுக்கு சர்வாதிகார போக்கிலே தீர்வுகாண முடியும். இதனை கருத்திற் கொண்டே மகாநாயக தேரர்கள் கருத்துக்களை வெளியிட்டனர் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!