ரிஷாத்துக்கு எதிராக கருத்து வெளியிட வீரவன்சவுக்கு தடை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ச அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கு கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ரிஷாத் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி குறித்த தடை உத்தரவு மார்ச் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என்றும் கொழும்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முஸ்லீம் தீவிரவாதம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்த கருத்திற்கு எதிராக ரிஷாத் பதியுதீன் மனுதாக்கல் செய்திருந்தார். அத்தோடு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!