நாட்டில் இடம்பெறும் காடழிப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வதில்லை: மனுச நாணயக்கார குற்றச்சாட்டு!

நாட்டில் இடம்பெறும் பாரிய காடழிப்பு நடவடிக்கைகளை, ஜனாதிபதி ஏற்றுக் கொள்வதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார குற்றஞ்சாட்டுகின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

காடழிப்பு குறித்து நாம் பாரக்கும் போது, எந்த வகையிலும் காடழிப்பு இடம்பெறவில்லை என ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.ஆனால் பாரியளவு காடழிப்பு இடம்பெறுவதாகவும், நிறுத்த முடியாத அளவு அழிவு இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவிக்கின்றார்.கடந்த 15 மாதங்களில் 270 காடழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இன்றைய பத்திரிகை செய்திகளில் வெளியாகியுள்ளன.

62 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளன.பாக்கியாவுக்கு குற்றஞ்சாட்டி பயனில்லை. இதுதான் யதார்த்தம். தேசிய கொள்கைளைக் கொண்ட அலைவரிசைகளில் கூட தற்போது காடழிப்பு தொடர்பான தகவல்கள் வெளியிடப்படுகின்றன.நாட்டுக்கு ஏற்படுகின்ற இவ்வாறான பாதங்களை வெளிப்படுத்தும் கடமையை ஊடகங்கள் மேற்கொள்கின்றன.அதற்கு அச்சுறுத்தல் விடுப்பதை பாரிய தவறாகவே நாம் பார்க்கின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!