ஜெனிவா வாக்கெடுப்பு நாட்டின் தோல்வி!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பு நாட்டின் தோல்வியை எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, ஒரு குறிப்பிட்ட தரப்பு வாக்களிப்பதைத் தவிர்ப்பது, அவர்கள் ஆதரவாகவோ அல்லது விடயத்திற்கு எதிராக வாக்களிப்பதாகவோ கருதப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தியா போன்ற ஒரு நாடும் ஜப்பான், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதும் அவர்கள் படிப்படியாக இலங்கையை எதிர்க்கின்றனர் என்பதை காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!