இஸ்ரேலில் பிரதமர் விஜயம் செய்த நகரம் மீது ராக்கெட் தாக்குதல்: பரபரப்பு சம்பவம்!

இஸ்ரேலில் பிரதமர் விஜயம் செய்த நகரம் மீது திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவிலிருந்து இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் ஏவப்பட்டதாகவும், இதனைதொடர்ந்து திறந்தவெளி பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

காசாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் இஸ்ரேலின் Beersheba நகரில் தாக்கியதாகவும், ராக்கெட் தாக்குதல் நடந்த நேரத்தில் Beersheba நகரில் இஸ்ரேலில் பிரதமர் Benjamin Netanyahu விஜயம் மேற்கொண்டிருந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராக்கெட் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து உணவகத்திலிருந்த பிரதமர் Benjamin Netanyahu-வை பாதுகாவலர்கள் அழைத்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!