குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை தூதுவராக நியமித்ததே தோல்விக்கு காரணம்!

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சி.ஏ.சந்திரபிரேமவை ஜெனிவாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமித்தமையே ஐ.நா மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தமைக்கான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியமையும் தோல்விக்கு காரணமாக அமைந்ததென அவர் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு காலத்தில் இலங்கை ஜெனிவாவில் வெற்றி பெற்றதாகவும் இந்தியா முழு ஆதரவு வழங்கியதால் அந்த வெற்றியை அடைய முடிந்ததாகவும் சுட்டிக்காட்டிய சம்பிக்க ரணவக்க, இந்தியாவிற்கு வழங்கிய 13வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13+ தருவதாக கூறிய உறுதியையும் நிறைவேற்றத் தவறியதால் இந்தியா இம்முறை ஆதரவு அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

87-89 வன்முறை காலத்தில் பயங்கரவாத குழுவொன்றை வழிநடத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நபரை ஜெனீவாவிற்கான நிரந்தர பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் அவருக்கு ஆதரவு வழங்க எந்தவொரு நாடும் முன்வராது எனவும் சம்பிக்க கூறினார்.

எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே ஜெனிவாவில் இலங்கைக்கு தோல்வி கிடைத்ததென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!